பார்சல் சர்வீஸ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் பணம் இருசக்கர வாகனங்கள் அபேஸ்: பெண் உட்பட 2 பேர் கைது

சென்னை:  திருவல்லிக்கேணி மாட்டான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (52). இவர், தனது இருசக்கர வாகனத்தை குஜராத்தில் பணியாற்றி வரும் மகனுக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன்படி, புழல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பேக்கேஜ் நிறுவனம் ஒன்றில், 9,440 ரூபாயை செலுத்தி, இருசக்கர வாகனத்தையும் ஒப்படைத்தார். ஆனால், குஜராத்தில் உள்ள தனது மகனுக்கு இருசக்கர வாகனம் சென்று சேரவில்லை. இதுகுறித்து, சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் தனலட்சுமி கேட்டபோது, அவர்கள் முறையாக பதில் எதுவும் கூறாமல் இருந்துள்ளனர். இதனால், அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், புழல் காவாங்கரை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பிரவீனா (30) என்பவர், பார்சல் சர்வீஸ் நடத்தி வருவதும், அவர், தங்களது வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று ஏமாற்றியதுடன், இருசக்கர வாகனங்களையும் அபேஸ் செய்தது தெரியவந்தது. அவரையும், அவருக்கு உடந்தையான செங்குன்றம் நியூ ஸ்டார் சிட்டியை சேர்ந்த சஞ்சய் (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: