வேளச்சேரி மேம்பாலத்தில் செல்போன் பறித்தவர்களை விரட்டி பிடித்த வாலிபர்

வேளச்சேரி: பள்ளிக்கரணையை சேர்ந்த மோகன் (33), நேற்று  வேளச்சேரி மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். மோகன், அவர்களை விரட்டி சென்றார். இதனால், அதிவேகமாக சென்ற மர்ம நபர்கள், வேளச்சேரி 100 அடி சாலையை கடக்க முயன்ற இளம்பெண் மீது மோதினர். இதனால், கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியனில் மோதி, இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். பின்தொடர்ந்து வந்த மோகன், பொதுமக்கள் உதவியுடன் அந்த 2 பேரையும் பிடித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திருவேற்காடு பகுதியை சேர்ந்த பிரதீப் (எ) பிரித்திவிராஜ் (24), பாலாஜி (19) என்பதும், இதில் பாலாஜி மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா, அடிதடி வழக் குகள்  நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனர்.

Related Stories:

More
>