ஆசிரியர் பணி வயது உச்சவரம்பு: அன்புமணி வரவேற்பு

சென்னை: ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது 40 வயதை கடந்தவர்களின் ஆசிரியர் பணி கனவை நனவாக்க உதவும். வயது வரம்பு உயர்வு அடுத்த ஆண்டு வரை மட்டுமே செல்லும் என அரசு அறிவித்திருப்பது நியாயமல்ல. அடுத்த ஆண்டிற்குள் 42 வயதைக் கடந்த அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க முடியாது. எனவே, வயது வரம்பு உயர்வு குறைந்தது பத்தாண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும்.

Related Stories:

More
>