தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரன் ரூ.224 அதிகரிப்பு: சவரன் ரூ.36 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை நேற்று ரூ.224 அதிகரித்தது. அதே நேரத்தில் சவரன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், சனிக்கிழமை விலையே அன்றைய தினம் விற்பனையானது. இந்த நிலையில் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.4,456க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.35,648க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டு நாட்களில் சவரன் ரூ.472 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,465க்கும், சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,720 க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,484க்கும், சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,872க்கும் விற்கப்பட்டது. மீண்டும் சவரன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Related Stories: