சில்லி பாயின்ட்

* உலக கோப்பை கால்பந்து போட்டியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் பிபாவின் முடிவை, ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் நடுகள வீரரான  லூகா மோட்ரிக்(குரேஷியா) கடுமையாக சாடியுள்ளார்.

* இந்திய ஆடவர் கால்பந்து அணியின்  பயிற்சியாளர்  இகோர் ஸ்டிமாக்(குரேஷியா), ‘நிதி தேவைக்காக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்துவதை வரவேற்கிறேன். அது இந்திய அணிக்கு வாய்ப்பை உருவாக்கும்’ என்று கூறியுள்ளார்.

* பெரு நாட்டில் நடந்த  இளையோர் உலக துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவில் இருந்து 85பேர் கொண்ட அணி பங்கேற்றது. அதில் இந்தியா 17 தங்கம் உட்பட  43 பதக்கங்களை வென்று முதல் இடத்தை பிடித்தது. இது குறித்து பயிற்சியாளர் யஷ்பால் ராணா, ‘வெற்றி மிதப்பில் மூழ்காமல் இளம் வீரர், வீராங்கனைகளை எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பது  மிக முக்கியம்’ என்று வலியுறுத்தி உள்ளார்.

* ‘இனவெறி கொண்ட ரசிகர்கள், விளையாட்டு அரங்கில் நுழைய நிரந்த தடை  விதிக்கப்படும்’ என்று இத்தாலி கால்பந்து கூட்டமைப்பின்  தலைவர் கேப்ரில்லே கிராவினா எச்சரித்துள்ளார்.

* அடுத்த ஆண்டு  தொடக்கத்தில் நடைபெற உள்ள  ‘ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம்  டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வருபவர்கள் , கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் விசா வழங்கப்படமாட்டது’ என்று அந்த நாடு எச்சரித்துள்ளது.

Related Stories:

More
>