‘சூப்பர் ஓவருக்கு’ சீனியர் ‘பவுல்-அவுட்’

ஒருநாள், டி20 ஆட்டங்களில் மோதும்  இரு அணிகளும்  ஒரே ரன் எண்ணிக்கையை எட்டி சரிநிகர் சமனில் ஆட்டம் ‘டை’ யானால் ,  இப்போது சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்படுகிறது. சூப்பர் ஓவர் முறை முதல்முறையாக 2008ம் ஆண்டு நடந்த டி20 ஆட்டத்தில்  அறிமுகமானது. அதேபோல் ஒருநாள் ஆட்டங்களில் 2011 உலக கோப்பையில் அறிமுகமானது. ஆனால் பயன்படுத்தும் சூழல் ஏற்படவில்லை. ஆனால் 2017ம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலக கோப்பையில் அறிமுகமானது. தொடர்ந்து 2019ம் ஆண்டு ஒருநாள் உலககோப்பை பைனல் ஆட்டத்தில்  சூப்பர் ஓவர் பயன்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான அந்த ஆட்டத்தில்  சூப்பர் ஓவரும் ‘டை’யாக பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டது. சூப்பர் ஓவருக்கு அறிமுகமாவதற்கு முன்பு  ‘ஆட்டம் ‘டை’யில்  முடியும் போது ‘பவுல்-அவுட்’ முறை  கடைபிடிக்கப்பட்டது.  ஆட்டத்தின் முடிவில் ஒவ்வொரு அணிக்கும் தலா 3 முறை பந்து வீச வாய்ப்பு தரப்படும். இரு அணியிலும் தலா 3 வீரர்கள்  பேட்ஸ்மேன் இல்லாத ஸ்டெம்பு மீது பந்து வீச வேண்டும். ஸ்டெம்பு மீது பட்டாலோ, ஸ்டெம்பை சிதற விட்டாலோ  ஒரு புள்ளி வழங்கப்படும்.

இந்த முறை 1991ம் ஆண்டு உள்ளூர் ஆட்டங்களில் அறிமுகமானது. ஆனால் சர்வதேச அளவில் 2006ம் ஆண்டு நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையே ‘டை’யான  டி20  ஆட்டத்தில் ‘பவுல்-அவுட்’ முறை அறிமுகமானது. அதில் நியூசி 3-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. அதேபோல் 2007 டி20 உலக கோப்பை லீக் சுற்றில்  இந்தியா ‘பவுல்-அவுட்’ முறையில் 3-0 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பவுல்-அவுட், சூப்பர் ஓவர் முறைகளுக்கு முன்பு எந்த அணியிடம் விக்கெட்கள், பந்துகள்  மிச்சமிருக்கின்றன என்பது உட்பட பல்வேறு முறைகள் கையாண்டு வெற்றி, தோல்வி முடிவு செய்யப்பட்டது.  

கூடவே  நாணயத்தை சுண்டி(டாஸ்)யும்  தீர்ப்புகள் எழுதப்பட்ட வரலாறுகள் உள்ளன. டி20 போட்டிகளை பொறுத்தவரை இதுவரை 20 ஆட்டங்கள் டையில் முடிந்துள்ளன. அவற்றில் 3 ஆட்டங்கள் ‘பவுல்-அவுட்’ முறையிலும், 17 ஆட்டங்கள் சூப்பர் ஓவர் முறையிலும் முடிவு எட்டப்பட்டன.

சென்னையில் தொடங்கிய வரலாறு

டெஸ்ட் ஆட்டங்களில் அப்படியே ‘டை’யையே முடிவாக ஏற்றுக் கொள்ளப்படும். சுமார் 130 ஆண்டுகளில் 2433 டெஸ்ட் ஆட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் 2 ஆட்டங்கள் மட்டுமே ‘டை’யில் முடிந்துள்ளன.  சென்னையில் 1986-87ல்  நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட்தான்  ‘டை’யில் முடிந்த  முதல் ஆட்டம்.

ஒருநாள்

ஒருநாள் ஆட்டங்களை பொறுத்தவரை  1984ம் ஆண்டு முதல் 2020 வரை 39 ஆட்டங்கள் ‘டை’யில் முடிந்துள்ளன. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,  இங்கிலாந்து ஆகிய அணிகள்  விளையாடிய  தலா 9 ஆட்டங்கள் ‘டை’யாகின. வெஸ்ட் இண்டீஸ் 10 முறை ‘டை’ முடிவை எட்டியுள்ளது.

Related Stories:

More
>