அஞ்சுகிராமம் அருகே டிரைவர் கொலை: நண்பனின் ஆசை நாயகியை அபகரிக்க முயன்றதால் கொன்றோம்.! கைதான 2 வாலிபர்கள் பகீர் வாக்குமூலம்

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் அருகே டிரைவர் கொலையில், நண்பனின் ஆசை நாயகியை அபகரிக்க முயன்றதால் ெகான்றோம் என்று, கைதான வாலிபர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ராமனாதிச்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரோச் அஜெய் ஜாண்சன் (32). டிரைவர். இவரை கடந்த 13ம் தேதி குமாரபுரம் தோப்பூர் பகுதியை சேர்ந்த திருமலை பெருமாள் மகன் பிரபாகரன் (30), கண்ணன் (37), அமல்ராஜ் (30)  ஆகியோர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது நண்பர்கள் கண்ணன், அமல்ராஜை ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராமனாதிச்சன்புதூர் பகுதியில் அவர்கள் 2 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கண்ணன், அமல்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். கண்ணன், அமல்ராஜ் ேபாலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பிரபாகனுக்கு ஏற்கனவே ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதை அறிந்த அவரது நண்பரான லியோன் பிரபாகன், இளம்பெண்ணை அணுகி, அவரது போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் பிரபாகரனிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபாகரன், லியோன் பிரபாகரனிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரபாகரன், லியோன் பிரபாகரனின் நண்பரான ேராச் அஜெய் ஜாண்சனிடம் விபரத்ைத கூறி, அவரை தடுத்து அறிவுரை ெசால்லி திருத்துமாறு ேகட்டு ெகாண்டுள்ளார். ஆனால், தான் அதுகுறித்து நண்பனிடம் எதுவும் ேபசப்ேபாவதில்ைல என்று ேராச் அஜெய் ஜாண்சன் மறுப்பு ெதரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் பிரபாகரனுக்கும், ேராச் அஜெய் ஜாண்சனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில், குமாரபுரம் தோப்பூர் முருகன் கோயில் அடிவாரம் அருகே லியோன் பிரபாகரன் மற்றும் ேராச் அஜெய் ஜாண்சன் ஆகியோர் நின்றுள்ளனர். அப்போது அங்கு வந்த பிரபாகரன், கண்ணன், அமல்ராஜ் ஆகியோர், இருவரையும் அரிவாள் மற்றும் கம்பியால் தாக்கி உள்ளனர். அதுபோல லியோன் பிரபாகரன் மற்றும் ேராச் அஜெய் ஜாண்சனும் பதிலுக்கு தாக்கி உள்ளனர். இதற்கிடையே ரோச் அஜெய் ஜாண்சனுக்கு பலமான அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் அவர் இறந்தார். இதே போல காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். ஆனால் அமல்ராஜ், கண்ணன், லாரி பிடித்து கரூர் ெசன்றுள்ளனர். பின்னர் பொருட்களை எடுத்து கொண்டு வெளிமாநிலத்துக்கு தப்பி செல்லலாம் என முடிவு செய்து ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது உஷாராக இருந்த போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இந்த நிலையில் விசாரணைக்கு பிறகு போலீசார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>