கோயில் இடத்தில் குயின்ஸ்லாண்ட்.. 177 ஏக்கர் நிலத்தை இன்னும் 2 நாட்களில் மீட்க அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை!!

பூந்தமல்லி : குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது என்றும் இன்னும் 2 நாட்களில் அதன் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  மற்றும் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜ கோபுரம் தெரியும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது என்று குறிப்பிட்ட அமைச்சர், ன்னும் 2 நாட்களில் அதன் நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் தவறு செய்து இருந்தாலும் அவரும் விசாரணை செய்யப்படுவார் என்ற கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார். தமிழக அரசுக்கு நெருங்க முடியாத இடம் என்று எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

 குயின்ஸ்லாண்ட் தீம் பார்க் அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் வட்டம், அருள்மிகு காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி திருக்கோயிலுக்கு சமுத்திரமேடு கிராமத்தைச் சார்ந்த உதயகிரி சாமைய்ய ஜமின்தார் என்பவரின் மகன் வெங்கைய்யா என்பவர் திருக்கோயிலின் பூஜை மற்றும் பராமரிப்பு பணியைத் தொடர்ந்து நடத்துவதற்குச் சொத்துகளை உயில் சாசன ஆவணம் எழுதிப் பதிவு செய்துள்ளார். அதன் பின்பு பல்வேறு காரணங்களால் சில நபர்கள் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>