×

வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு..நேற்று 20-க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளுக்கு தீவைப்பு

டாக்கா: வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், முகநூலில் குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறு பரப்பியதாக சில தினங்களுக்கு முன்னதாக குமிலா என்ற இடத்தில் நவராத்திரியையொட்டி துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இந்து கோயில்கள், 60-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் பதட்டமும், வன்முறையும் நாட்டில் பல இடங்களில் பரவியது. உடனே பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனையடுத்து. அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கான் கமல் இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதன்படிப்படையில், வன்முறையாளர்கள் 100 பேருக்கும் மேல் கைதாகியுள்ளனர். 4 வன்முறையாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்று 20-க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். டாக்காவிலிருந்து 225 கி.மீ. தூரத்தில் உள்ள ரங்கபுர் என்ற கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. வங்காள அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்த போதும் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருகிறது.


Tags : Hindus ,Bangladesh , Increase in attacks on Hindus in Bangladesh .. More than 20 Hindu homes were set on fire yesterday
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!