கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து படகு ஒன்றில் 3 பேர் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த கப்பலை இலங்கை கடற்படையினர் மோதவிட்டு கவிழ்த்துள்ளனர். 3 பேர் கடலில் தவறி விழுந்த  நிலையில் 2 பேரை மீட்டு இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காணாமல் போன ஒருவரை இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>