வில்லிவாக்கத்தில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி

சென்னை: சென்னை வில்லிவாக்கம், பலராமபுரம், அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ் (47). இவரது தாய் தனலட்சுமி (67). மது போதைக்கு அடிமையான சிவராஜ் தினமும், மது அருந்திவிட்டு வந்து அவரது தாய் மற்றும் குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றும் வழக்கம்போல் இரவு 11 மணி அளவில் மதுபோதையில் வந்த சிவராஜ் தன்னுடைய தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதை அவரது தம்பி பிரகாஷ் (44), ‘ஏன் வந்து அடிக்கடி தகராறு செய்கிறார்’ என்று கேட்டுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றியதில்  ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பிரகாஷூம் மது போதையில் இருந்ததால், ஆத்திரமடைந்து சிவராஜை, கட்டையால் பலமாக தலையில் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவராஜ் துடிதுடித்து பலியானார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிந்து, பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>