133 அடியை கடந்தது முல்லை பெரியாறு

கூடலூர்: கேரளாவில் பல மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக பெரியாறு, இடுக்கி, நெய்யாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,926 கனஅடியாக உள்ளது. நேற்று முன்தினம் 132.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 133 அடியை தாண்டியது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 133.20 அடி. அணையிலிருந்து தமிழகத்திற்கு 1,867 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.  அணையின் இருப்புநீர் 5,399 மில்லியன் கனஅடி. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 55.87 அடி. நீர்வரத்து வினாடிக்கு 1,520 கனஅடி. நீர்வெளியேற்றம் 1,119 கனஅடி.

Related Stories:

More
>