சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாள் அனுமதி: மாஸ்க் அணிந்து வந்து மலையேறிய பக்தர்கள்

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதம் 8 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி நேற்று முதல் 4 நாட்கள் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு அடுத்த தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் பக்தர்கள் திரண்டனர். சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories:

More
>