திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: 1.33 கோடியில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற தீர்மானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. துணை பெருந்தலைவர் எம்.பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீ.காந்திமதிநாதன், இரா.வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ச.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், மாவட்ட கவுன்சிலர்கள் டி.தென்னவன், ஜி.இந்திரா குணசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் த.எத்திராஜ், எஸ்.வேலு, ஆர்.சங்கீதா ராஜ், கே.விமலாகுமார், ஜெ.செல்வராணி ஜான், எல்.சரத்பாபு, டி.கே.பூவண்ணன், ஆர்.ஷகிலா ரகுபதி, டி.சாந்தி தரணி, கே.ஆர்.வேதவல்லி சதீஷ்குமார், வ.ஹரி, பா.விமலா, தி.கிருபாவதி தியாகராஜன், எஸ்.பொற்கொடி சேகர், ஆர்.திலீப்ராஜ், ஏ.நவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியத்திற்கு 15 வது மத்திய நிதி குழு மானியம் 1 கோடியே 33 லட்சத்து 28 ஆயிரத்து 837 ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது. இதில் 38 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Related Stories: