ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் உட்பட 5 பேருக்கு ஆயுள்: சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு நடந்த ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலம் சிர்சாவில் ஆன்மிகவாதி குர்மீத் ராம் ரஹிம் சிங் நடத்திவரும் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் பெண்கள் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தொடர்பாக ஒரு மர்ம கடிதம் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரத்தில் குல்தீப்சிங், நிர்மல் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002ம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கோர்ட் உத்தரவுப்படி 2006ம் ஆண்டு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிபிஐ தரப்பிலும் குர்மீத் ராம் ரஹிம் சிங்கையும் குற்றவாளியாக சேர்த்தது. இவ்வழக்கில் ஜெகதீப்சிங், குர்மீத் ராம் ரஹிம் சிங், குல்தீப்சிங், நிர்மல்சிங், கிரிஷன்லால் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என விசாரணையின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. இதில் 51 வயதாகும் குர்மீத் ராம் ரஹிம் தனது 2  பெண் சீடர்களை கற்பழித்தார் என்பது முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. இந்த வழக்கில் 20 ஆண்டு ஆயுள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் என்பவர் மர்மமாக கொல்லப்பட்ட வழக்கிலும் குர்மீத்ராம் பெயர் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், குர்மீத் ராம் ரஹீம் உட்பட 5 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கடந்த 9ம் தேதி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த நிலையில் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் நேற்று தண்டனை விவரங்களை அறிவித்தது. அதில்‘கடந்த 2002ம் ஆண்டு நடந்த ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.  குர்மீத் ராம் ரஹீமுக்கு 31 லட்சமும், மற்ற நான்கு பேரில் ஒருவருக்கு 75 ஆயிரமும், இருவருக்கு 1.25 லட்சமும், மேலும் ஒருவருக்கு 1.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை ரஞ்சித் சிங் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More
>