குஜராத் தொழிற்சாலையில் தீ விபத்து: 2 பேர் பலி

சூரத்: சூரத் நகரின் கடோதரா பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் விரைவாக அடுத்தடுத்த தளங்களுக்குச் சென்று தப்பினர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து கடோதரா இன்ஸ்பெக்டர் ஹேமந்த் படேல் கூறிய போது, ``தொழிலாளி ஒருவர் தீயில் இருந்து தப்ப பைப்லைன் வழியாக இறங்கிய போது, மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். மற்றொருவர் மூச்சு திணறி பலியானார்,’’ என்று தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாடியில் நின்று கொண்டிருந்த தொழிலாளர்களை ஹைட்ராலிக் கிரேன் உதவியுடன் மீட்டனர். இதுவரை 145 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>