சிறையில் இருக்கும் மகனை பார்த்து ஷாருக்கான் கண்ணீர்

சென்னை: போதை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட மகனை பார்த்து ஷாருக்கான் கண்ணீர்விட்டார்.  மும்பை கப்பல் பார்ட்டியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர், போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது, மும்பையின் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் 20ம் தேதி வரை சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே, சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானை சந்தித்தார். அப்போது, சமீர் வான்கடே தரப்பில் ஆர்யன் கானுக்கு சில நல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானை, சமீர் வான்கடே சந்தித்தார். அப்போது அவரிடம், ‘சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நான் ஏழைகளுக்கு உதவப் போகிறேன். அனைவரும் பெருமை அடையும் வகையில் இனிமேல் நடந்து கொள்வேன்’ என்று கூறினார். ஆர்யன் கானுக்கு நாளை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது. சிறையில் சோர்ந்து இருக்கும் ஆர்யன்கானுடன், ஷாருக்கும், அவரது மனைவி கவுரியும் வீடியோ கால் மூலம் பேசினர். ஆர்யன்கான் தனது பெற்றோருடன் சுமார் 10 நிமிடங்கள் பேசினார். பெற்றோருடன் வீடியோ அழைப்பில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுதார். சிறையில் இருந்த ஆரியன் கானை வீடியோ காலில் கண்டதும் ஷாருக்கானும், கவுரியும் கண்ணீர் விட்டனர்’ என்றனர்.

Related Stories:

More
>