சொல்லிட்டாங்க...

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தி, அதை கபளீகரம் செய்ய பாஜ முயற்சி செய்கிறது.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

சசிகலா அரசியல் பேசாமல் இருந்தாலே ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடையும்.

- அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.

எங்கள் ஆட்சியில் ஹவாய் செருப்பு போட்டவர்களும் விமானத்தில் பறக்கலாம் என்றது பாஜ. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இப்போது சாமானியர்கள் சாலையில் பயணிப்பதே சவாலாக இருக்கிறது.

- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

நாட்டின் வளர்ச்சிக்கான அரசின் முன்னேற்ற நலத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடை போடுகின்றன.

- பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

Related Stories:

More
>