சீக்கியர்களை தாக்கிய விவகாரம்: ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய இளைஞர் நாடு கடத்தல்

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றவர் விஷால் ஜூத். இவர் சிட்னி நகரில் வசித்து வந்தார். கடந்தாண்டு  சிட்னியில் உள்ள சீக்கியர்களை தாக்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இவர் சிட்னியில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களை மட்டுமே தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அவரை விடுதலை செய்யும்படி கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், சிறையில் இருந்து நேற்று பரோலில் வந்த விஷால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இது குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்க் தனது டிவிட்டரில், `ஆஸ்திரேலியாவின் சமூக கூட்டமைப்புக்கு களங்கம் விளைவிப்பதை சகித்து கொள்ள முடியாது. அமைதியை சீர்குலைக்க ஆஸ்திரேலியா அனுமதிக்காது,’’ என்று எச்சரித்துள்ளார்.

Related Stories:

More
>