4 பிளாட்டுகளை விற்பனை செய்த விவகாரம் ரூ.2.47 கோடியை தராமல் ஏமாற்றிய நபர் கைது

சென்னை: நான்கு பிளாட்டுகளை விற்பனை செய்தும் ரூ.2 கோடியே 47 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை தராமல் ஏமாற்றிய நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, வேளச்சேரியை சேர்ந்த சுச்சரித்தா மதனகோபால் என்பவருக்கு சொந்தமான எண் 26 ரத்னபுரி லே-அவுட் என்ற முகவரியில் உள்ள ரூ.3 கோடி மதிப்புள்ள 4 பிளாட்டுகளை விற்பனை செய்து தருவதாக கூறி, அவரிடம் 4 பிளாட்டுகளுக்கும் பொது அதிகாரம் பெற்றுக் கொண்டு அவருக்கு தெரியாமல் மேற்படி 4 பிளாட்டுகளை ராஜலட்சுமி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு தலா 2 பிளாட்டுகள் வீதம் 4 பிளாட்டுகளை விற்பனை செய்துவிட்டு சுச்சரித்தாவிற்கு தரவேண்டிய விற்பனை தொகை ரூ.2,47,80,000 யை தராமல் ஏமாற்றி பணமோசடி செய்தது சம்பந்தமாக ராமகிருஷ்ணன் (48) என்பவர் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தினர். இந்நிலையில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணன் என்பவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

More
>