அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு பிறகே குழந்தைகள், பதின்பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி!: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்..!!

டெல்லி: நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது அறிவியல் ரீதியாகவும், இருப்பை பொறுத்தும் முடிவு செய்யப்படும் என கொரோனா துரிதப்படை தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியிருக்கிறது. தற்சமயம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் - வி ஆகிய 3 தடுப்பூசிகள் இரு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. 12 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு செலுத்துவதற்காக சைகோவ் - டி என்ற பெயரில் ஊசியின்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.பால், குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்ற காலவரையறை நிர்ணயிப்பது தற்போது கடினமானது என்று கூறியுள்ளார். சைடஸ் கேடிலாவின் தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், எப்போது அதை சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பதை தடுப்பூசி செலுத்துவதற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தெரிவிக்கும் என்றும் வி.கே.பால் கூறியுள்ளார். இந்தியாவில் 12 முதல் 18 வயதுடையவர்களுக்கான தடுப்பு மருந்தை சைடஸ் கேடில்லா நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஊசி வழியாக இல்லாமல் சொட்டுமருந்து மூலமாக செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>