வாருங்கள் அழலாம்: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க 'அழுகை அறை'அறிமுகம்

மாட்ரிட் : ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் மக்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் சாலையில், ஸ்பானிஷ் மொழியில் தென்படும் அழுகை அறை என்ற வாசகங்கள் இந்த சமூகத்தில் நிலவும் மன தடைகளை உடைக்கும் முயற்சிகளில் ஒன்று. இந்த அறையில் நாம் மனதில் எதையும் மறைத்து வைக்க தேவையில்லை. அழ விரும்பினால் தனி அறைக்கு சென்று மனம் அமைதி நிலைக்கு திரும்பும் வரை அழுது தீர்க்கலாம். மனதிற்கு அமைதி தரும் செயல்களை சுதந்திரமாக செய்யலாம். அங்குள்ள தொலைபேசி வாயிலாக தேர்ந்த மனநல ஆலோசகரை தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளை பெறலாம்.

கவலை, மன சோர்வு, கணவன் - மனைவி முரண்பாடுகள், சுயமரியாதை போன்ற மனதை பாதிக்கும்  பிரச்சனைகளுக்காக அழுவதோ, உதவி கேட்பதோ இந்தியாவில் மட்டுமல்ல, ஸ்பெயின் உட்பட பெரும்பாலான உலக நாடுகளிலும் மோசமாக செயலாகவே பார்க்கப்படுகிறது. மனப் போராட்டங்களையும் கசப்பான எண்ணங்களையும் யாரிடமும் வெளிப்படுத்தாமல் ஆழ் மனதிற்குள் புதைத்து வைத்தே வாழும் பலரும் ஒரு கட்டத்தில் தற்கொலை முடிவுக்கு தூண்டப்படுகின்றன. மனித உணர்வுகளுக்கு சமூகம் மதிப்பு அளிக்காதபோது, அவற்றை முழுமையாக வெளிக்கொணர்ந்து மனிதர்களை ஆற்றுப் படுத்தவே அழுகை அறைகள் என்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>