மாம்பழத்துறையாறு அணை பகுதியில் முளைவிட்ட 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாம்பழத்துறையாறு அணை பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் மூழ்கியது. மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நிறைவு பெற்று கும்பப்பூ சாகுபடி பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பல இடங்களிலும் கன்னிப்பூ அறுவடையே நிறைவு பெறவில்லை. இந்தநிலையில் கடந்த வாரத்தில் புயல் மழை காரணமாகவும், தற்போது அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இடைவெளியின்றி பெய்த இந்த மழையின் காரணமாக பல பகுதிகளிலும் நெல் வயல்களில் அறுவடை செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் வில்லுக்குறி அருகே மாம்பழத்துறையாறு அணை பகுதியில் பிபி சானல், புல்லான்கோணகுளம் மடை ஏலா உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது விவசாயிகளை கவலைகொள்ள செய்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி ராமசாமி பிள்ளை கூறுகையில், ‘தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக வயல்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நெற்பயிர் வயலிலேயே முளைத்துவிட்டது. இதனால் எனக்கும் என்னைப்போன்ற விவசாயிகளுக்கும் ெபரும் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

More
>