இடியும் அபாய நிலையில் ரேஷன்கடை கட்டிடம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை கிராமத்தில் புல்லமடை, குருனி பச்சேரி, ஆதிமுத்தன் குடியிருப்பு உள்ளிட்ட கிராமமக்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்து. இங்கு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில் அந்த கட்டிட சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அச்சத்துடன் வந்து சென்றனர்.

இந்த நிலையில் தற்காலிகமாக தனியாருக்கு சொந்தமான ஒரு வீட்டில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. மழைக்காலம் துவங்க உள்ளதால் ரேஷன்கடை கட்டிடம் பெயர்ந்து விழுந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் விதமாக பழைய கட்டிடத்தை இடித்து விட்டு ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>