'ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்'!: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேச பேச்சு..!!

விழுப்புரம்: ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக தொண்டர்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக 50வது ஆண்டு விழாவில் பேசிய அவர், நிழல் சசிகலாவால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டார். மேலும் ஓராயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை துளியும் அசைத்து பார்க்க முடியாது. அவரால் தொடங்கப்பட்ட அமமுகவையே நிலைநிறுத்த முடியாத சசிகலா, எவ்வாறு அதிமுகவை நிலைநிறுத்த முடியும்.

எங்களுக்கு ஜெயலலிதா அம்மா, எம்.ஜி.ஆர். இருக்கின்றனர். சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு தேவையில்லை. என்ன நாடகம் நடத்தினாலும், என்ன வேஷம் போட்டாலும், எந்த உருவத்தில் வந்தாலும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மீண்டும் ஏமாற தயாராக இல்லை என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

Related Stories:

More
>