கடைமடை பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?.. விவசாயிகள் எதிர்பார்ப்பு

காரைக்கால்: காவிரியின் கடைமடை மாவட்டங்களில் ஒன்று காரைக்கால் மாவட்டம் மழைக்காலங்களில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையானது காரைக்காலில் உள்ள ஆறுகளின் வழியாக வந்து கடலில் கலக்கிறது. அவை சிறு, சிறு வாய்க்கால்களாகவும் பிரிக்கப்பட்டு தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பல்வேறு வடிகால் வாய்க்கால்கள் தூர்வார இருந்து வருகிறது. இதன் காரணமாக மழை காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வாய்க்கால்கள் வழியாக கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாய்க்கால் முழுவதும் ஆகாயத் தாமரைகள் முளைத்து தண்ணீரை வடிய விடாத அளவிற்கு இருக்கிறது. இதனால் உடனே வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என காரைக்கால் பகுதி மக்கள் பொதுப்பணித் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>