கண்டாச்சிபுரம் அருகே சாலையோர முட்புதர்களை அகற்ற கோரிக்கை

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மேல் வெங்கமூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேல் ஒதியத்தூர்-வெங்கமூர் சாலையில் தினமும் வெங்கமூர் கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என கிராமத்தினர் தினமும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இக்கிராமத்தில் வசிப்பவர்கள் தினமும் அடிப்படை வசதிகளுக்காகவே ஒதியத்தூர் சென்று வருவது உண்டு. இந்நிலையில் ஒதியத்தூர்-வெங்கமூர் சாலையில் அதிகளவு வளைவுகளில் முட்புதர்கள் மற்றும் பூண்டு செடிகள் வளர்ந்துள்ளது.

இதனால் இப்பிரதான சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் எதிரில் நான்கு சக்கர வாகனம் வந்தால் கூட ஒதுங்கி செல்ல வழியில்லாமல் சாலை அடர்த்தியாக உள்ளது. இச்சாலை புதர்மண்டி கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி படையெடுக்கின்றன. மேலும் சாலையோர முட்புதர்களால் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் ஒதியத்தூர்-வெங்கமூர் சாலையின் ஓரமுள்ள முட்புதர்களை அகற்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>