பொன்னமராவதி சந்தை பகுதியில் கழிவுகளை அப்புறப்படுத்த கோரிக்கை

பொன்னமராவதி: பொன்னமராவதி சந்தைப்பகுதி மற்றும் மார்க்கெட் பகுதியில் கழிவுகளை அள்ளி சுத்தம் செய்யவேண்டும் என பொதுமக்கள், கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஸ்நிலையம் பின் பகுதியில் தினசரி மார்க்கெட் மற்றும் சந்தைப்பகுதி உள்ளது. மார்க்கெட் பகுதியில் கழிவுகள் அதிகஅளவு கொட்டப்பட்டு கிடக்கிறது. இதேபோல சந்தைப் பகுதியிலும் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது.

இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள கடைக்காரர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த கழிவுகளை அப்புறப்படுத்தி இப்பகுதியின் மழைநீர் தங்குதடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் மார்க்கெட் கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>