முதியவர் உடலை டியூப் மூலம் கொண்டு சென்ற உறவினர்கள்

தொடர்மழையால் பாபநாசம் சேர்வலாறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனால் தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம்  கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் விகேபுரம் அடுத்த மேல கொட்டாரத்தை சேர்ந்த அரசுப் போக்குவரத்து கழக முன்னாள் டிரைவரான சுப்பையா தேவர் (80) என்பவர், இயற்கை மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை அவருக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இருப்பினும் இவர்களது தோட்டம் விகேபுரம் தாமிரபரணி ஆற்றை கடந்துசெல்லும் இடையாறு என்னுமிடத்தில் உள்ளது. இதனிடையே தொடர்மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியதால் இறந்தவரின் உடலை கயிறு கட்டி டியூப்பில் வைத்து அக்கரைக்கு கொண்டுசென்று அடக்கம் செய்தனர்.

Related Stories:

More
>