600 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அடித்துச் சென்ற வெள்ளம்

செங்கோட்டை: தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புளியரையில் கொட்டித் தீர்த்த மழையால் சாத்தான்பத்து குளத்தின் மறுகால் உடைந்ததோடு அதில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளம் குரங்கு நடை ரோடு வழியாக கோழி சுண்ட கால்வாயை உடைத்தது. மேலும் தாமரைக்குளம் புரவு சாத்தான் பற்று குளம் புரவு, கத்தியூற்று குளம் புரவு ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்றது .இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயி தாட்கோ நகர் கென்னடி  கூறுகையில் ஆண்டுதோறும் பருவ மழையின் போது இந்த பகுதியில் உள்ள சாத்தான் பத்து குளம் மறுகால் உடைந்து இதற்கு கிழக்குப் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் பயிர்கள் சேதமாவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த சாத்தான் பத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் சுருங்கி உள்ளது, இந்த கால்வாயை தோண்டி அகலப்படுத்தி கால்வாயை சீரமைக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதேபோல் மேக்கரை அடவி நயினார்  அணை நிரம்பி வெளியேறும் அதிகப்படியான வெள்ள நீரால் அனுமன் நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.   கரிசல் மற்றும் பண்பொழி பகுதிகளில்  உள்ள தவரவத்தி, நாச்சி பத்து, வாடி புரவு  பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் அனுமன் நதி ஆற்றை ஒட்டி அமைந்துள்ள அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தேன் சுமார் 60 ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ளம் நெற்பயிர்களை   முழுவதுமாக  தண்னீரில் அடித்து சென்றுள்ளது. மீதமுள்ள 240 ஏக்கரில் விவசாய நிலங்களில் தண்ணீர் வயல்களில் புகுந்து தேங்கி உள்ளது.இந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

Related Stories:

More
>