ஆம்பூர் காப்புக்காடுகளில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

ஆம்பூர்: ஆம்பூர் வனச்சரக காப்புக்காடுகளில் தமிழ்நாட்டின் மாநில மலர் என கூறப்படும் செங்காந்தள் மலர்கள் பூத்து குலுங்குகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காப்புக்காடுகளில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்கும். அந்த மலர்கள் காண்பவரை கவர்ந்திழுக்கும் அழகும், மூலிகை தன்மையும் நிறைந்தது. இந்த செங்காந்தள் மலர்களை மலைவாழ் மக்கள் ‘கண் வலி பூக்கள்’ என்றும் அழைக்கின்றனர்.

இந்த செங்காந்தள் மலர்களை சிறிதுநேரம் உற்று பார்த்து கொண்டிருந்தால் கண்களில் வலி எடுப்பது போன்ற ஒரு உணர்வு வரும். அதனால், இந்த செங்காந்தள் மலர்களை ‘கண் வலி பூக்கள்’ என அழைக்கின்றனர்.

Related Stories: