ஆந்திர மாநில துடைப்பம்: கரூரில் அமோக விற்பனை

கரூர்: கரூரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் வகைகள் விற்பனை செய்வது உண்டு. இதனடிப்படையில் கரூரில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகோலம் பகுதியில் பயிர் செய்யப்படும் கொண்ட சீப்பு ( பூமார்) என்ற பெயருடைய கோரை பயிர் உற்பத்தி செய்யப்பட்டு அதில் இருந்து பெறப்படும் தட்டைகளைக் கொண்டு துடைப்பம் தயார் செய்யப்படுகிறது.

இது சராசரி 500 கிராம் எடையில் கோரைப்புற்களை தனித்தனியாக முடிச்சுப்போட்டு ஒன்றாக இணைந்து நீண்ட நாட்கள் பயன்படும் வகையில் இந்த துடைப்பம் தயார் செய்யப்படுகிறது. இந்த துடைப்பம் ஜோடி ரூபாய் 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த துடைப்பம் கிரானைட், மார்பிள்ஸ் மற்றும் செங்கற்களால் ஆன வீடுகளுக்கு பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். ஒரு துடைப்பம் குறைந்தபட்சம் ஓராண்டு வரை உழைக்கும் தன்மை உடையது என்று அதை விற்பனை செய்யும் ஆந்திர மாநில தொழிலாளி கூறினார்.

Related Stories: