சிங்கம்புணரி தெருக்களில் பன்றிகள் தொல்லை: கட்டுப்படுத்த கோரிக்கை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இவற்றை பேரூராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கம்புணரி நகரில் உள்ள கக்கன்ஜி நகர், வடக்கு வேளார்தெரு, நல்லாகுளம் ஊரணி, என்ஜிஓ காலனி உள்ளிட்ட தெருக்களில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் பன்றிகள் அவ்வப்போது வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பன்றி கூட்டத்தால் அப்பகுதியில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழைக்காலம் தொடங்கி உள்ளதால் தேங்கும் நீரில் பன்றிகள் சுற்றித்திரிவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பன்றிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>