ராஜபாளையம் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்: கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ‘டிப்ஸ்’

ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த விவசாயிகள் வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ராஜபாளையம் வட்டாரத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் 20 முதல் 30 நாள் பயிராக உள்ளது. இந்த பயிரில் படைப்புழு தாக்குதல் அங்காங்கே தென்படுகிறது. இதனால், விவசாயிகள் தாய்ப் பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஹெக்டேருக்கு 12 முதல் 50 எண் வீதம் படைப்புழு இனக்கவர்ச்சி பொறி வயல்களில் ஆங்காங்கே வைக்க வேண்டும், வரப்பு பயிராக சூரியகாந்தி, எள் தீவனச்சோளம் அல்லது பயறுவகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம்.

விதைப்பு செய்து 15-25 நாளில் வேம்பு சார்ந்த் பூச்சிக் கொல்லிகள் அல்லது அசாடிராக்டின் 1500 பிபிஎம் ஹெக்டருக்கு 2.5 லிட்டர் வீதம் தெளிக்க வேண்டும். மேலும், 40-45ம் நாளில் மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற உயிரி பூச்சிக்கொல்லி 2.5 கிலோ அல்லது படைப்புழு தாக்குதல் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளான ஸ்பினோடோரம் 250 மில்லி அல்லது குளோரன்ட்ரானிலிப்ரோல் 200 மில்லி அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 200 கிராம் மில்லி என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேலும், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் படைப்புழு கட்டுப்படுத்த வரப்பு பயிர் மற்றும் ஊடு பயிர் செய்வது, மேற்கூறிய பூச்சி மருந்து வாங்க பின்னேற்பு மானியம் ராஜபாளையம் வட்டாரத்தில் 360 ஹெக்டேருக்கு வழங்கப்படுகிறது. எனவே, மக்காச்சோள பயிரில் வரம்பு பயிர் போட்ட விவசாயிகள் உடனடியாக அந்தந்த உள்ள வேளாண் உதவி அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையா கேட்டுக் கொண்டார்.

Related Stories: