தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிறுக்கு பதில் 23-ம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிறுக்கு பதில் 23-ம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடமாடும் பல் மருத்துவமனை சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். செவ்வாய், வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் பல் மருத்துவ சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே தமிழகத்தில்தான், மாநிலம் முழுவதற்குமான மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் இதுவரை 5 ஞாயிற்றுகிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் நடமாடும் பல் மருத்துவமனை சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். பின்னர் பேசிய அவர்; செவ்வாய், வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் பல் மருத்துவ சேவை வழங்கப்படும். தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிறுக்கு பதில் 23-ம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். இதுவரை இல்லாத வகையில் 5வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.

அசைவ பிரியர், மது குடிப்போர் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். அசைவம், மது எடுத்துக் கொண்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்தியை நம்புகிறார்கள். அசைவ பிரியர்கள், மது குடிப்போர் தடுப்பூசி போடும் விதமாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.

Related Stories:

More
>