சசிகலா - அதிமுக இடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக திட்டம்!: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

திண்டுக்கல்: சசிகலா - அதிமுகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதிமுகவை கபளீகரம் செய்ய பாரதிய ஜனதா திட்டமிட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சசிகலா வருகையால் அதிமுகவில் கோஷ்டி பூசல் அதிகரிக்கும் என்றார். மேலும் அதிமுகவிற்குள் குழப்பத்தை உருவாக்கி அந்த கட்சியை கபளீகரம் செய்ய பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.

கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.இன். கருத்து மிகவும் ஆபத்தானது என்று கூறிய அவர், கோவில்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் நல்லது என்றார். இதனிடையே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

More
>