தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென் மேற்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கேரளாவில் பெரும் மழை பெய்து வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை நீடித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகள் பெரும்பாலும் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து  வருவதால், அங்கும் நீர் பிடிப்பு பகுதிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும்  மழை நீடித்து வருகிறது.

இதையடுத்து, வளி மண்டல மேல் அடுக்கில் நீடித்து  வரும் காற்று சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், பிற கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். அதன் தொடர்ச்சியாக தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: