ஜூஸ் குடித்த சிறுவன் பலி?

பொங்கலூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னூரில் உள்ள தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டூ குமார் (36). தனது மனைவி சுஹாந்தி தேவி, மகன்கள் தன்னுகுமார் (6), அபிமன்யு (3) ஆகியோருடன் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குட்டூ குமார் தன் குடும்பத்தினருடன் பல்லடம் வந்தார். பேருந்து நிலையத்தில்  உள்ள ஒரு கடையிலிருந்து ஜூஸ் வாங்கி சுஹாந்தி தேவி, தன்னுகுமார், அபிமன்யு 3 பேரும் குடித்தனர். நள்ளிரவு முதல் குட்டூ குமாரின் மூத்த மகன் தன்னுகுமாருக்கு வாந்தியும் வயிற்று போக்கும் ஏற்பட்டது.

நேற்று காலை தன்னு குமார் இறந்துவிட்டார். இத்தகவல் அறிந்து அங்கு சென்ற பல்லடம் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சிறுவனின் இறப்புக்கு காரணம் பல்லடம் பேருந்து நிலையத்தில் ஒரு கடையில் வாங்கி குடித்த ஜூஸ் தானா? என விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>