மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கணிப்பு சசிகலாவால் அதிமுகவில் குழப்பங்கள் அதிகரிக்கும்

திண்டுக்கல்: சசிகலா வருகையால் அதிமுகவுக்குள் கோஷ்டிபூசல், குழப்பங்கள் அதிகரிக்கும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றிய மாநாடு நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சசிகலா வருகையால் அதிமுகவுக்குள் கோஷ்டிபூசல், குழப்பங்கள் அதிகரிக்கும். அதிமுகவுக்குள் குழப்பத்தை உருவாக்கி கபளிகரம் செய்வதற்கு பாஜக முயற்சி செய்கிறது. மற்ற மாநிலங்களில் செய்வதைப் போல் இங்கேயும் செய்கிறார்கள்.

ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நிலக்கரி கொடுக்க மறுப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டு பல மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆவணங்கள் அளவில் மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருந்தது. ஆனால், பயன்பாட்டிற்கு நிலக்கரி இல்லை.  இதுகுறித்து அதிமுக முன்னாள் மின்சார துறை அமைச்சரிடம் கேட்டால், பதில் இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்துக்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் கருத்து ஆபத்தானது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள ஆவணங்கள், விலை மதிப்பற்ற நகைகள், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளி சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். இவ்வாறு ெதரிவித்தார்.

Related Stories: