ஊட்டி- குன்னூர் இடையே மலை ரயிலில் பயணம் ெசய்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

ஊட்டி: தமிழக  கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 15ம்  தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்தார். ஆளுநருடன் அவரது  குடும்பத்தினரும் வந்துள்ளனர். இவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில்  அமைந்துள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ளனர்.  நேற்று முன்தினம் மஞ்சூர்  அருகே உள்ள இயற்கை எழில் சூழ்ந்த அப்பர்பவானி பகுதிக்கு தனது  குடும்பத்தினருடன் காரில் சென்று அங்குள்ள மின்வாரியத்துக்கு சொந்தமான  மேல்பவானி அணை மற்றும் மடிப்புமலை உள்ளிட்ட இயற்கை காட்சிகளை  குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். இந்நிலையில், நேற்று மதியம் 12.15  மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் புறப்பட்ட நீலகிரி மலை ரயிலில் கவர்னர் தனது குடும்பத்தினருடன் பயணித்தார். பின்னர், கார்  மூலம் ஊட்டி ராஜ்பவன் வந்தடைந்தார்.

Related Stories:

More
>