என்ன வேடம் போட்டாலும் ஏற்க மாட்டோம் எத்தனை சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரம்: எத்தனை சசிகலா வந்தாலும் அதிமுகவை துளிகூட அசைக்க முடியாது என்று விழுப்புரத்தில் நடந்த அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் கூறினார். விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்காகவும் துவங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா மூலம் தற்போது வரை மக்களின் சக்தியை கொண்டுள்ள கட்சியாக அ.தி.மு.க உள்ளது.

50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அ.தி.மு.க., பல வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது. அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். 2021 தேர்தலில் அதிமுக, தோல்வியுற்றது. கடந்த 1996ம் ஆண்டு சந்தித்த தேர்தலில், அதிமுக படுதோல்வியை தழுவினாலும், மீண்டும் எழுந்து வந்த பெருமை நமது தொண்டர்களையே சேரும். இந்த தோல்வி நிரந்தரமில்லை. இந்த இயக்கத்தை எத்தனை எதிரிகள், துரோகிகளை நேராக சந்தித்துதான் நாம் வீழ்த்தியுள்ளோம். இன்று சில துரோகிகள் அதிமுகவே நாங்கள் தான் என கூறுகின்றனர். இதை நாங்கள் ஏற்கமாட்டோம். எத்தனை சசிகலா வந்தாலும், இனி அ.தி.மு.க., இயக்கத்தை துளிக்கூட அசைத்து பார்க்க முடியாது.

சசிகலாவால், அவர்கள் தோற்றுவித்த அ.ம.மு.கவையே நிலைநிறுத்த முடியவில்லை. இதில், அவர் அதிமுகவை காப்பாற்ற போவதாக கூறி வருகிறார். நீங்கள் என்ன வேடம் போட்டாலும், அ.தி.மு.க., தொண்டர்கள் இன்னொரு முறை ஏமாற தயாராக இல்லை. எதிரிகள், துரோகிகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் நமது செயல்பாடு அமைய வேண்டும் என கூறினார்.

சசிகலாவால், அவர்கள் தோற்றுவித்த அமமுகவையே நிலைநிறுத்த முடியவில்லை. இதில், அவர் அதிமுகவை காப்பாற்ற போவதாக கூறி வருகிறார்

Related Stories:

More
>