ராஜ் குந்த்ரா மீது நடவடிக்கை எடுக்க போலீசில் பாலிவுட் நடிகை புகார்

மும்பை: ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  ராஜ் குந்த்ராவின் ஜே.எல் ஸ்ட்ரீம் நிறுவனத்துக்காக சில காட்சிகளில் நடித்தேன். இதற்காக அவர்கள் சொன்னபடி எனக்கு பணம் கொடுக்கவில்லை. ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது புகார் அளிக்க எனது சட்ட ஆலோசகர்கள் குழுவுடன் ஜூஹூ காவல் நிலையம் சென்றேன்.

என் பணத்தைக் கொடுக்க மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். என்னால் இனிமேல் பயத்துடன் வாழ முடியாது என்பதால் போலீசில் புகார் அளித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுக்கு வந்த ராஜ் குந்தரா, தன்னை  திடீரென்று கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக ஏற்கனவே ஷெர்லின் சோப்ரா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>