வெப்தொடரில் நடிக்கிறார் திரிஷா

சென்னை: சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்த திரிஷா, முதல்முறையாக ஒரு வெப்தொடரில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள திரிஷா, தன் சம்பந்தப்பட்ட டப்பிங் பணிகளை முடித்துவிட்டார். இதற்கு முன்பு அவர் நடித்துள்ள ‘ராங்கி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் ஜோடியாக அவர் நடித்த ‘ராம்’ படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக சில கதைகள் கேட்டு வந்த திரிஷா, தெலுங்கில் உருவாகும் ஒரு வெப்தொடரில் நடிக்க சம்மதித்துள்ளார். சூர்யா வங்கலா இயக்கும் இத்தொடருக்கு ‘பிருந்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. ஓடிடியில் வெளியாகும் இத்தொடர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் திரிஷா துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

Related Stories:

More
>