சொல்லிட்டாங்க...

தேர்தலில் நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று உங்களுக்கு தெரியும். என்னால் அதிமுகவிற்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் அமைதியாக இருந்தேன்.    :- ஜெயலலிதா தோழி சசிகலா

கட்சிக்காரர்களை சுரண்டி, சித்ரவதை செய்து தன் குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தியவர் சசிகலா என்பதை அதிமுகவின் கடைக்கோடி தொண்டனும் மறக்க மாட்டான்.   :- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா வருகையால் அதிமுகவுக்குள் கோஷ்டிபூசல், குழப்பங்கள் அதிகரிக்கும். அதிமுகவுக்குள் குழப்பத்தை உருவாக்கி கபளீகரம் செய்வதற்கு பாஜ முயற்சி செய்கிறது.    :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

மின்சார வாரியத்தின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் 1.59 லட்சம் கோடி கடனையும், மின்சார வாரியத்தின் இழப்பையும் குறைக்கும் வகையில் இருக்க வேண்டும்     :- பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories:

More
>