பாலாற்றில் வெள்ளபெருக்கு கரையோர கிராம மக்களுக்கு அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் விடுத்துள்ள அறிக்கை: ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை  ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை. பாலாற்றில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது, இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பாலாற்றை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவை சேர்ந்த பாலாற்றை ஒட்டிய கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பாலாற்று கரையோர கிராம மக்கள் பாலாற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: