ஏரியில் மூழ்கி குழந்தை பலி

சென்னை: ஒரகடம் அடுத்த உமையாள்பரனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது 3 வயது பெண் குழந்தை பிரதிக்‌ஷா, நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிய போது, திடீரென மாயமானது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலஇடங்களில் தேடியபோது, அருகில் உள்ள ஏரியில் குழந்தை சடலமாக மிதந்தது தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை ஏரியில் மூழ்கி இறந்ததா, அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>