அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருப்பது பாக்கியம்: ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

சென்னை: அதிமுக 50வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக இயக்கம் 49 ஆண்டுகால வெற்றிப்பயணத்தை நிறைவு செய்து 50வது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதையும், இந்தப் பொன்விழா ஆண்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பெரும் பாக்கியம் கிடைத்துள்ளது. ஜெயலலிதா மறைவினையடுத்து, அதிமுக ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை, ஒரே ஆண்டில் 16 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக தோன்றி 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50வது பொன்விழா ஆண்டு தொடங்கும் இப்பொன்னாளில், நல்ல உள்ளமும், தூய நெஞ்சமும் கொண்ட ஜெயலலிதா வழிகாட்டுதலோடு, அவர் வகுத்துக்கொடுத்த பாதையில் பயணிப்போம்.

Related Stories:

More
>