தமிழகத்தில் 1,218 பேருக்கு கொரோனா: 30 மாவட்டங்களில் யாரும் இறக்கவில்லை

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து  தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,218  பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,87,092. 1,411 பேர் குணமடைந்தனர். அதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,36,379 ஆக உள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று தனியார் மருத்துவமனையில் 6 பேரும், அரசு மருத்துவமனையில் 9 பேர் என 15 பேர்  உயிரிழந்துள்ளனர்.

அதில் அதிகபட்சமாக கோவையில் 4 பேரும், சென்னை, திருவாரூர், திருச்சி, வேலூர் ஆகிய  மாவட்டங்களில் தலா 2 பேரும், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபரும் என 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,899 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. அதிகபட்சமாக நேற்று  சென்னையில் 156 பேர், கோவையில் 132 பேர், என 2 மாவட்டத்தில் நூற்றுக்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு  எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>