விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் மழையளவை முன்கூட்டியே தெரிந்து கொள்ள ஏற்பாடு குடிநீர், பாசன தேவைகளுக்கான நீர் விநியோகத்தை கணக்கிடுவதற்கு புது திட்டம்: நீர்வளத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை கொண்டு மாவட்ட அளவில் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கான நீர் விநியோகத்தை கணக்கீடுவதற்கு திட்டம் வகுக்க நீர்வளத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக நீர்வளத்துறையின் அங்கமாக நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் உள்ளது. இந்த துறையின் சார்பில் மாநிலத்தின் நிலத்தடி நீர்வளத்தில் இருப்பு மற்றும் தரம் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2020ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 1166 குறுவட்டங்கள் 5 வகைகளாக பிரிக்கப்பட்டு, அதில் 435 குறு வட்டங்கள் அதிநுகர்வாகவம், 63 குறுவட்டங்கள் அபாயகரமானதாகவும், 225 குறுவட்டங்கள் மித அபாயகராமானதகவும், 409 குறுவட்டங்கள் பாதுகாப்பானதாகவும், 34 குறுவட்டங்கள் தரம் குறைவானதாகவும் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிலத்தடி நீர்வளத்தினை பாதுகாத்து சேகரித்து மற்றும் மேம்படுத்த தடுப்பணைகள், நிலத்தடி தடுப்பு சுவர்கள், நீர் செறிவூட்டும் துளைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகள் போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக, குறைகிறதா என்பது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர் மட்டம் தொடர்பாக ஆய்வு செய்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு பற்றாக்குறையாக உள்ளதா அல்லது உபரியாக இருக்கிறதா என்பது குறித்து அறியும் வகையில் ஒவ்வொரு குறுவட்டங்களாக வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு  நிலத்தடி நீர் பயனை அறிய முடியும்.

இந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட அளவில் மழையளவை தெரிந்து கொள்ளும் வகையில் www.groundwatertnpwd.org.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் அடுத்துவரும் நாட்களில் எவ்வளவு மழை பொழிவு இருக்கும் என்பதை துல்லியமாக முன்கூட்டியே தெரிவிக்கும். மேலும், இந்த மழையளவை வைத்து கொண்டு இனிவரும்காலங்களில் பாசன மற்றும் குடிநீர் பிரச்சனைகளுக்கு தேவையான நீர் விநியோகிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் இதை வைத்து பாசன சாகுபடிகளில் ஈடுபடுவது எளிமையாக இருக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: