ரயில்வே பிளாட்பாரத்தில் இளம்பெண் குத்தாட்டம்: பொதுமக்கள் அதிர்ச்சி

கொல்கத்தா: ரயில்வே பிளாட்பாரத்தில் ‘ரீமிக்ஸ்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. மேற்குவங்க மாநிலம் ெகால்கத்தாவை சேர்ந்த நடன ஆசிரியை சஹேலி ருத்ரா என்பவர், ரயில்வே  பிளாட் பார்மில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடித்த திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு ரீமிக்ஸ் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஆட்டம் போடும் சஹேலி ருத்ரா, முகக்  கவசம் அணிந்திருந்தார்.

பிளாட் பார்மில் ஆட்டம் போடும் போது, அவரை சுற்றி  நின்றவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். சிலர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். பொது இடத்தில் இவ்வாறு ஆட்டம் போடுவது குறித்து விமர்சனம் செய்தனர். இந்த  வீடியோவை 2.5 லட்சத்திற்கும் ேமற்பட்டோர் பார்த்துள்ளனர். சமூக ஊடகங்களில்  அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் சஹேலிவைய பலரும் பலவிதமாக  விமர்சித்துள்ளனர்.

Related Stories:

More
>